tamilnadu

img

‘எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டோம்!’

‘எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டோம்!’

“தியாகச் செங்கொடியை நெஞ்சில் ஏந்தி, மக்களுக்கானப் போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வோம், எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறினார். சிபிஎம் அகில இந்திய 24-ஆவது மாநாட்டின் நிறைவாக, மதுரையில் தோழர் என். சங்கரய்யா நினைவுத் திடலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் பேசியதாவது: பாலஸ்தீனத்திற்கு  ஆதரவாக இருக்கிறோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டைத் தமிழ்நாட்டுத் தோ ழர்கள், மதுரைத் தோழர்கள் சிறப்பாக நடத்தி கொ டுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெறச் செய் திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான், தோளில் அணிந்திருக்கும் ‘ஸ்கார்ப்’ துண்டு, யூதவெறி இஸ்ரேலுக்கு எதிராக- அமெ ரிக்காவுக்கு எதிராக- காசா மற்றும் பாலஸ்தீன மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் அடையாளம். மொத்த உலகமும் உங்களோடு இருக்கிறோம்; ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, இன அழிப்பு யுத்தத்தி ற்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதற்கான குறியீடு. மதச்சார்பின்மை கூட்டாட்சியைப் பாதுகாப்போம் மதுரையில் நடைபெற்று இருக்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, ஒற்றுமையின் மாநாடு. இது தீர்மானகரமான மாநாடு. செங் கொடியை உயர்த்திப் பிடித்து, ஆர்எஸ்எஸ் - பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மதவெறிக் கொள் கைக்கு எதிராக, அவர்களது தாக்குதலுக்கு எதி ராக, மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம், கூட்டா ட்சித் தத்துவத்தைப் பாதுகாப்போம், ஜனநாய கத்தைப் பாதுகாப்போம், பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமையைப் பாதுகாப்போம் என பிரகடனம் செய்யும் மாநாடு. கடந்த மாநாட்டிற்குப் பிறகு, மூன்றாண்டு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அற்புதமான 22 தோழர்கள், ரத்தம் சிந்தி தங்க ளின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் குண்டர்களால் 11 பேரும், கேரளத்தில் 4 பேரும்; அவர்களில் இருவர் ஆர் எஸ்எஸ்-சால் கோரமாக படுகொலை செய்யப் பட்டவர்கள். இத்துடன் பீகார், ஜார்க்கண்டில் நில உட மையாளர்கள், நில மாபியா கும்பல்களால் கொல்லப்பட்டவர்கள் ஆகிய தியாகிகளின் ரத்தத் தால் உருவானது இந்த செங்கொடி.  பின்வாங்க மாட்டோம்; வலுவாகப் போராடுவோம்! மதுரைக்கு மகத்தான தியாகிகளின் வரலாறு உள்ளது. தூக்குமேடை பாலு, மாரி, மணவாளன், லீலாவதி ஆகியோரை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது தியாகத்தின் கொடி, இது போராட்டத்தின் கொடி. மக்கள் சேவைக்கான கொடி என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  நாம் மக்களிடம் செல்வோம். எந்தச் சூழ்நிலை யிலும் பின்வாங்க மாட்டோம். மக்கள் வாழ்க்கை யில் மாற்றம் காண, மக்கள் நலனைப் பாதுகாக்க அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.  இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.  அவரது ஆங்கில உரையை, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி மொழிபெயர்த்தார்.