tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 620 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.  பேராவூரணி வட்டம் காலகம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, வீடு கட்ட நிதியுதவி கேட்டு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் சலவைப் பெட்டி வேண்டி வழங்கிய மனுவின் அடிப்படையில் உடனடித் தீர்வாக சலவைப் பெட்டியினை வழங்கினார்.

சிறுமிக்கு  பாலியல் தொல்லை: முதியவர் கைது

தஞ்சை கரந்தை அருகே் கணேசன்(65) என்பவர், 10 வயது சிறுமி ஒருவர் விளையாடுவதற்காக வந்தபோது, அந்தச் சிறுமியை, கணேசன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  பாதிக்கப்பட்ட குழந்தை இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், உடனே இது குறித்து, தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சந்திரா வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.