சென்னை, ஜூலை 7 -
மாநிலக் கல்லூரியில் அடிப்படை வசதி கோரி வெள்ளியன்று (ஜூலை 7) கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழம்பெருமை வாய்ந்த மாநிலக் கல்லூரி யில் மற்றும் விடுதியில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், விடு திக்குள் வந்து செல்ல நேரக்கட்டுப்பாடு கூடாது, மாணவர்களின் உரிமையை பறிக்கும் வகையில் உறுதிமொழி சான்றி தழ் கேட்பதை கைவிட வேண்டும், விடுதி உணவு கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராள மான மாணவர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கல்லூரி முதல்வர் ராமன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேசி னார். மாணவர்களின் கோரிக்கைகளை பட்டி யலிட்டு பேசினர். இதனையடுத்து கோரிக்கை கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக வும், அவற்றை விரைந்து நிறைவேற்றுவ தாகவும் உறுதியளித்தார்.
இப்போராட்டத்திற்கு மாணவர் சங்க நிர்வாகி சேரன் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண் குமார், செயலாளர் எஸ்.மிருதுளா, மாநிலக் குழு உறுப்பினர் தமிழ், முத்துகணேஷ் உள்ளிட்டோர் பேசினர்.