எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 99வது வட்டம் புல்லாபுரம் பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் இமசடங்கு அறையை புதுப்பிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட மின்சாரம் சார்ந்த வேலைகளை கொடுக்க வேண்டும். மின்சாரம் மற்றும் மின் அழுத்தம் தடையின்றி வழங்க வேண்டும். புல்லாபுரம் ஊர் முகப்பில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்கும் போது விபத்துக்குள்ளாகுவதால் அங்கு போக்குவரத்து காவலரை நிரந்தரமாக அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை ஞாயிறன்று (ஜன.11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புல்லாபுரம் கிளைச் செயலாளர் ஏ.ரவி தலைமையில் நடைபெற்ற இயக்கதை கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, கே.முருகன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கே.மூர்த்தி, பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.சுரேஷ், மா.கோவிந்தசாமி, ஆ.ஆரோக்கியதாஸ் து.சரவணன், ம.நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
