சென்னை,ஜன.8- பாலியல் வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட குழந்தை, பெண்களுக்கு ஆதரவாக வழக்கு நடத்த நிதி உள்ளிட்ட தேவையான உதவிகள் செய்யப்படும் என இணையவழியில் நடை பெற்ற எல்ஐசி மகளிர் துணைக் குழுவின் 26வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உழைக்கும் மகளிர் துணைக் குழுவின் இணைய வழி மாநாடு சனிக்கிழமை அன்று (ஜன 8) நடை பெற்றது. இதில் இணை அமைப்பாளர் டி.லீலாவதி தலைமை தாங்கினார். இம்மாநாட்டின் துவக்க நிகழ்வு, அம்பத்தூர் கிளை உறுப்பினர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. டி.ஆர்.கமலா வரவேற்புரை யாற்றினார். திரைக்கலை ஞர் ரோகிணி துவக்கவுரை யாற்றினார். அவர் தம் உரையில், மிகப்பெரிய பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம் மிக கடுமையான பொருளாதார இழப்பு கால கட்டத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் பள்ளி மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அவல நிலையில் அவதிப்படும் மாணவர்க ளுக்கு உதவும் வகையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம்-2 மகளிர் துணைக் குழு கண்ணும் கருத்துமாக செயலாற்றி வருகிறது. இளைய சமுதாயத்தின் எதிர் காலத்திற்காக மிகப்பெரிய செயல்பாட்டை நீங்கள் ஆற்ற வேண்டும் என்றார். மேலும் அரசு பள்ளிகளை பாதுகாக்கும் எல்ஐசி ஊழி யர்களும், பொதுமக்களும் கரம்கோர்த்து பாதுகாக்க வேண்டும் எனவும் 10 ஆண்டுகால பயணம் இன்னும் பன்னெடுங்கால தொடர் பயணமாக மாறி மிக ப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்தி னார். அமைப்பாளர் கே.துளசி வேலை அறிக்கையை சமர்பித்தார். பிரேம் கல் யாணி, சாய் பிரேமா, ஹேமாவதி, எஸ்.எஸ்.கீதா, டி.லதா மகேஸ்வரி, டி.ஆர்.கமலா, அனுராதா கணேசன், ஆர்.சிந்துஜா ஆகியோர் பங்கேற்றனர். ஐசிஇயூ இணைச் செயலாளர் ஆர். சர்வமங்களா தொகுப்பரை யாற்றினார். மாநில அமைப் பாளர் ஜே.விஜயா வாழ்த்தி ப்பேசினார். மாநாட்டில் அமைப்பாளராக கே.துளசி தேர்வுசெய்யப்பட்டார்.
தீர்மானம்
வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்து புனரமைத்து தருவது, காப்பீட்டுக் கழ கத்தில் செயல்படும் ஊடக விமர்சனக் குழுவை உருவா க்குவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிறைவாக வி.விஜய லஷ்மி நன்றி கூறினார்.