இராமநாதபுரம்:
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எல்ஐசிதான். நாடு முழுவதும் நாற்பது கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் உள்ளனர் என மதுரை கோட்ட முதுநிலை மேலாளர் எல்.செந்தூர் நாதன் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று எல்ஐசியில் காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை துவக்கி வைத்தும் பேசியஅவர், இந்தியாவில் இன்சூரன்ஸ் வணிகத்தில் எல்ஐசி முதலிடத்தில் உள்ளதுஎன்றார். தொடர்ந்து பல்வேறு அதிகாரிகள் பேசுகையில், “எல்ஐசி மதுரைக் கோட்டம் ஆறு கோட்டங்களை உள்ளடக்கியது. புது வணிகத்தில் மதுரைக் கோட்டத்திலேயே இராமநாதபுரம் கிளை முன்னணியில் உள்ளது.இதற்குக் காரணம் பாலிசிதாரர்களுக்குவிரைவான சேவை வழங்குவதுதான்” என்றனர்.
இந்தப் பேரணியில் எல்ஐசி இராம நாதபுரம் கிளை முதுநிலை மேலாளர் ஜி.லட்சுமணன், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கே.வெள்ளைத் துரை, மதுரை கோட்ட வணிக மேலாளர் வி.எஸ்.அனந்தகுமார், இராமேஸ்வரம் கிளை மேலாளர் டி.சுப்பிரமணி யன், உதவிக் கிளை மேலாளர் சிவக் குமார், முகவர்கள் செல்வராஜ், கர்ணன், தெட்சிணாமூர்த்தி, அருள்ஜோதி, மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் அரண்மனையில் துவங்கிய பேரணிஎல்ஐசி அலுவலகத்தில் நிறை வடைந்தது.