சென்னை, மார்ச் 7- கட்டுமானத் தொழிலா ளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் இடையே பாது காப்பான கட்டுமான நடை முறைகளின் அம்சங்க ளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் 52வது தேசிய பாதுகாப்பு முகாம் சென் னையில் நடைபெற்றது. நவீன்’ஸ் கட்டுமான நிறுவனம் சார்பில் நவீன்’ஸ் ஸ்டார்வூட் டவரிஸ் 3.0 நடைபெற்ற இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட கட்டு மான தொழிலாளர்கள் பங்கேற்றனர். பணியிடத்தில் பாது காப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதை யும், கட்டுமானத் தளங்களில் ஏற்படும் விபத்துகளின் அபாயத்தைத் தடுப்பதை யும் நோக்கமாகக் கொண்டு இந்த முகாம் நடத்தப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலா ளர்கள் இணை இயக்குநர் மணி சங்கர் பேசுகையில். தமிழ்நாடு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதி களவில் கொண்டுள்ளது. உதவி தேவைப்படும் எந்த வொரு தொழிலாளிக்கும் எப்போதும் உதவ தயாராக இருக்கிறேன் என்றார். நவீன்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆர். குமார் இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் கட்டுமானத் தளங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் அபாயங் களை குறைக்கவும் பணி யிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.