திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கருப்புகுப்பம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பேருக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வீதம் பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.