வேலை நிறுத்தம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) தலைவர் முத்துரத்தி னம் கூறியதாவது: நூல் விலை ஏற்றத்தைக் கண் டித்து, இன்றைக்கு திருப்பூ ரில் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட நிறுவனங்கள் போராட் டத்தில் பங்கெடுத்துள்ளன. நாளொன்றுக்கு ரூ. 200 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும். இந்த 2 நாள் போராட்டத்தில் ரூ. 400 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும். அதேபோல் கடந்த 19 மாதங்களில் ரூ. 200க்கு விற்ற நூல் விலை, ரூ. 450 செலுத்த வேண்டி உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா உட்பட 37 தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களால் இந்த போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பஞ்சை, இந்திய பஞ்சாலை கழகம் மூலம் நூற்பாலை களுக்கு விநியோகிக்க வேண்டும். ஏற்கனவே நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேல் பஞ்சு பதுக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், பதுக்கல் பஞ்சை வெளிக்கொண்டு வர ஒன்றிய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இன்று உண்ணாநிலை |
நூல் விலை உயர்வு எதிர்ப்பு தெரிவித்து, ஜவுளித் தொழிலையும், பல லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க கோரியும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்படுகிறது. |
சிபிஎம் தர்ணா
நூல் விலையை குறைத்திட வேண்டும். ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி ரெடி மேட் கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட தொழில்களை உள்ளடக்கிய ஜவுளி பாதுகாப்பு கழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். மாவட்ட சிபிஎம் செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. குமார் மற்றும் கட்சி கிளை செயலாளர்கள் ஏரா ளமானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.