districts

சாலையோர வியாபாரிகள் அரசிடம் கேட்பது என்ன ?

கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க.  ஆட்சியில் சீரழிந்து கிடந்த தமிழகத்தை  மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதை யில்  அழைத்துச்செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள் ளவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தவும் நலவாரியங்கள் உள்ளன. சாலையோரங்களில் கடைகளை வைத்து பிழைத்துவரும் வியாபாரிகள் சென்னை யில் ஏராளமானோர் உள்ளனர். ஒன்றிய அரசின் கணக்கெடுப்பின் படி, 2014 வரை, மக்கள் தொiயில் சுமார் 3 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒட்டு மொத்த இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்டோர்  உள்ளனர்.   தமிழகத்தில் குறைந்த பட்சம் சுமார் 18 லட்சம் பேர் இந்த வியாபாரத்தை நம்பியுள்ளனர். இது ஒரு சமூகப் பிரச்சனை.  வேலையின்மை காரணமாக   அரசிடம் வேலை கேட்டு போகாமல், சமூகத்தின் தவறான வழிகளில் செல்லா மல், தனக்குத்தானே தேடிக்கொண்ட சுய மரியாதை கொண்ட ஒரு சுய வேலை  வாய்ப்பு இதுவாகும்.  தமிழக அரசு மிகுந்த  பொறுப்புணர்வோடு இவர்களின் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண வேண்டும். குறிப் பாக நகரங்களையொட்டியே இவர்களின் கடைகள் அதிகமாக உள்ளன.  சென்னையில் மட்டும், தாம்பரம் முதல்  ஆவடி வரை சுமார் 2 லட்சம் பேர்  சாலையோர வியாபாரத்தை நம்பி யுள்ளனர்.  ஆனால், அரசு கணக்கெடுப் பின்படி சுமார் 12 ஆயிரம் மட்டுமே உள்ள தாக கூறப்படுகிறது. கடந்த 42  ஆண்டுகளாக சாலையோர வியாபாரிக ளுக்காக பணியாற்றியதில் நம்சங்கத்தினருக்கு நேரடி அனுபவம் உள்ளது.

கடந்த 1979-ல், சென்னை, சைனா பஜார், ரட்டன் பஜாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்து சாலையோர வியாபாரிகள்  சங்கம் உருவாக்கப்பட்டது.  இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சங்கத்திற்கு தலைமை தாங்கி, வழிகாட்டினர்.   1984-ல் சென்னை உயர்நீதி மன்ற உத்தர வின் மூலம், 1985-ல், 794 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி, இடம் ஒதுக்கீடு செய்து, லைசென்ஸ் வழங்கியது.  இதை 1989-ல் வந்த திமுக அரசு, அங்கீகரித்து, உரிமத்தை புதுப்பித்து கொடுத்தது.   1991 மற்றும் 1996  ஜெயலலிதா ஆட்சியில், தொலைநோக்குத்திட்டம் 2000  சென்னை என்ற திட்டத்தின் கீழ், பல பகுதிகளில், கடைகள் அகற்றப்பட்டன.  இதற்கு நிரந்தர  தீர்வு காண, 1994-ம் ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி , ராஜா அண்ணாமலை மன்றத் தில் சென்னை சாலையோர வியாபாரி களின் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.  அதில்  உச்சநீதி மன்ற முன்னாள் நீதியரசர்  மறைந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் கலந்து கொண்டு வழி காட்டினார். அவர் கூறிய கருத்துக்களின் சாரம் தான், இன்று ஒன்றிய அரசின் சட்டமாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளாகவும் வந்துள்ளன. “ சாலையோர வியாபாரம் என்பது அரசியல் சட்டத்தின் படி, ஓர் அடிப்படை உரிமை.  அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல் கடைகளை காலி செய்வது, சட்ட விரோதம்.  சாலையோர வியாபாரிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அரசு ஒவ்வொரு பகுதியிலும், ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும்.  அதில், நீதித்துறை, அரசுத் துறை, மாநகராட்சி, சுகாதாரத் துறை, நகர அமைப்பு பொறி யாளர், வியாபாரிகள், பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும்.

 ஒரு நகரத்தின் உண்மை யான அழகு எதுவென்றால், அந்த மக்களின் முன்னேற்றம் தான்.  மாறாக, அவர்களை வெளியேற்றுவது, நகரத்தின்  அழகுக்கு எதிரானது” என்று கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர்கள் என்.டி. வானமாமலை, என்ஜிஆர்.பிரசாத், உ.ரா.வரதராசன் (சிஐ டியு), ஏ.எம். கோபு (ஏஐடியுசி), மாதர் சங்க தலைவர்  உ. வாசுகி போன்றோர், சாதாரண ஏழை எளிய சாலையோர வியாபாரி களை, காவல் துறை, சமூக விரோதிகளாக கருதி, கசக்கிப் பிழிவதை, இனியும் சகித்துக்  கொள்ள முடியாது” என்றார்கள்.   மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் பேசும்போது, “ இந்த ராஜா அண்ணாமலை  மன்றம் ஏழைகளை உட்கார வைத்ததின் மூலம் புனிதம் அடைந்து விட்டது” என்று  கூறினார்.  இறுதியில், சென்னை மாநகராட்சி  அனைத்து வியாபாரிகளுக்கும் அடை யாள அட்டை வழங்கி, இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று, தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 29.03.1995 மற்றும் 13.12.1996 உச்சநீதி மன்ற உத்தர வின் படி, சைனா பஜார், ரட்டன் பஜார் பகுதியை சேர்ந்த 794 வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்பட்டது. சென்னை நகர மேயராக இன்றைய முதல்வர்  மு.க. ஸ்டாலின் இருந்த காலத்தில் நடைபெற்றது.   இன்று சென்னையில் மட்டுமல்ல,  மதுரை,  கோவை, திருச்சி, சேலம்,திருநெல்வேலி என பெருநகரங்களிலும், சாலையோர வியாபாரிகளுக்கு சாதகமான ஒன்றிய அரசு சட்டங்கள் வந்து விட்டன. சென்னையில் சில பகுதிகளில், வெண்டிங் கமிட்டி மேற் பார்வையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க.  தேர்தல் அறிக்கையில், நடைபாதை வியாபாரிகளுக்கு, வணிகம் செய்ய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்று  கூறப்பட்டுள்ளது.  இது, பெரும்பான்மை யான வியாபாரிகளுக்கு பலன் தராது.  பொதுமக்கள் வருகையும் இருக்காது, வியாபாரமும் நடக்காது.

தீர்வுகள்
சாலையோர வியாபாரம், பல பிரிவு களைக் கொண்டது, 500 ரூபாய் முதல்,  சில லட்சம் ரூபாய் வரை, முதலீடுகள்  இதற்காக தேவைப்படுகிறது. பூ, பழம், காய்கறி கடை, ஸ்டேஷனரி கடை, காலணி கள் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடைகள், சாப்பாட்டு கடைகள், பேக் கடைகள், ரெடி மேட் துணி வகை கடைகள், தேநீர் கடைகள் என பல பிரிவுகள் உள்ளன. இவைக ளுக்கு இட ஒதுக்கீடு முறைப்படுத்துதல், பொதுவான திட்டமிடல் கூடாது, முடியாது. ஆங்காங்கு உள்ள நிலைமைகளுக்குத் தக்கவாறு அமைக்க வேண்டும். மண்டல வாரியான வெண்டிங் கமிட்டிகளில், வியாபாரிகள் கருத்துகளுக்கு, முதலிடம் கொடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தட்டுக் கடைகளை அனுமதிக்கலாம். தாராளமாக உள்ள வீதிகள், பெரிய தெருக்களில் உள்ள பங்க்  கடைகளை பர்மா பஜார் மாடலில் அமைக்க வேண்டும். இது சாலையோர  வியாபாரிகளை, சிறுகடை வியாபாரிக ளாக தரம் உயர்த்தும். சில வீதிகளை, சாலையோர வணிக வீதிகளாக அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம் போக்குவரத்து பாதிக்காமல் இதைச் செய்ய வேண்டும், செய்ய முடியும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்கள் அருகில், அரசுக்கு சொந்தமான இடங்களில், நவீன  முறையில் கட்டிடக் கடைகள் கட்டிக் கொடுப்பது, அரசின் கடமை.

இது கவர்ச்சி யாகவும், மிக நவீனமாகவும், சுற்றுலாத் தலம் போல் அமைக்க வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டோடு இணைக்கப்பட வேண்டும். இதனால், வியாபாரம் பெருகும். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்தும். சுற்றுலாத் தலங்கள், கோவில் திரு விழா, தர்கா, சர்ச் விசேச கால கட்டங்க ளில், கடைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும், சுற்றுச்சூழல், சுகாதாரம், போக்குவரத்தை சீராக்கவும், கடையை முறைப்படுத்தவும், வாடகை வசூலிக்கவும், அலுவலகம் இருக்க வேண்டும். காவலர்களைக் கொண்டு, போக்குவரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பொது இடங்களில் வாகன நிறுத்தம் பராமரிப்பது போல், இது  அமைய வேண்டும். அங்கு போலீஸ் பூத்  இருப்பதும் அவசியம்.  முக்கியமான பொதுக்கழிப்பிட வசதிகள், இங்கு மிக மிக அவசியம். சில லட்சங்கள் பணம், அரசு செலவு செய் தால், பல லட்சம் பேர் சுய வேலை  வாய்ப்பிற்கானதாகவும், அழகாக இருக்கவும் உதவும். பொருளாதாரத்தில், சுமார் 40 விழுக்காடு, மேற்கண்ட வியா பாரங்களின் மூலமே, நடைபெறுகிறது. இன்றைய சூழலில், ஸ்மார்ட் சிட்டி புதிய பேருந்து நிலையங்கள் கட்டுதல், ரயில் நிலைய விரிவாக்கம் போன்ற திட்டமிடலில், வியாபாரங்கள் வாழ்வாதாரங்கள் பாது காக்கப்பட வேண்டுமென்றால், அவர்களை யும் இணைத்தே திட்டமிடல் அமைய வேண்டும். இதுவே ஏழை எளிய வியாபாரி களின் முக்கியமான கோரிக்கையாகும்.

ஆ. அபுதாகீர்  
பொதுச் செயலாளர், சென்னை நகர சிறுவியாபாரிகள் சங்கம்