சென்னை, ஆக. 1- சொத்துவரி உயர்வை யும், மின் கட்டண உயர்வை வையும் ரத்து செய்ய வேண்டும் என சிஐ டியு வடசென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) வட சென்னை மாவட்ட 15ஆவது மாநாடு அம்பத்தூ ரில் தோழர்கள் மைதிலி சிவராமன், டி.என், நம்பிராஜன், ஏ.ஜி.காசி நாதன் நினைவரங்கில் ஜூலை 30, 31 ஆகிய தேதி களில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமை தாங்கி னார். மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வி.குப்பு சாமி வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் சி.திருவேட்டை ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் மாநாட்டை நிறைவு செய்து பேசுகையில், ஓலா உபேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையைத் தடுக்கும் வகையில் கேரள இடது முன்னணி அரசு “கேரளா சவாரி” என்ற திட்டத்தை துவக்கி நாட்டுக்கு முன்னு தாரனமாகத் திகழ்கிறது. தமிழக அரசும் அதுபோல் ஒரு திட்டத்தை செயல் படுத்த முன்வர வேண்டும் என்றார்.
கடந்த 8 ஆண்டு பாஜக ஆட்சியின் தவ றான பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் மட்டும் 62 முறை வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஆனால் அரசு தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வில்லை. மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்து அந்த தொழிலை ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசை பொருத்த வரை ஒன்றிய அரசின் சில திட்டங்களை எதிர்த்தாலும் தொழிலாளர்களின் பிரச்ச னைகளை தீர்ப்பதில் சுணக்கம் நீடிக்கிறது. திராவிட மாடலோ, மோடி மாடலோ தொழிலாளர் களை பாதுகாக்காது. இடது சாரி மாடல் மட்டும்தான் தொழிலாளர்களையும், பொதுத்துறை நிறுவனங் களையும் பாதுகாக்கும் என்றார். எனவே தொழிற்சங்க உரி மையையும், தொழிலாளர் கள் உரிமையையும் பாது காக்க இடதுசாரி மாடலை மக்களிடம் கொண்டு சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நலவாரிய ஆன்லைன் குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே, பாது காப்புத் துறை, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் வழங்கக் கூடாது, அமுதம் அங்காடி களை நுகர்பொருள் கழகத்தில் இருந்து கூட்டுறவுத் துறைக்கு மாற்றக் கூடாது, மின்சார சட்ட மசோதா 2021ஐ கைவிட வேண்டும், மின்வாரி யத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்க ளின் வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், வடசென்னை பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், செய லாளராக சு.லெனின்சுந்தர், பொருளாளராக வி.குப்பு சாமி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.