திருத்தணி அடுத்த மத்தூர் ஊராட்சியில் கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானம் இன்றி தவிக்கும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு இந்திய வளர்ச்சி இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றிய திட்ட மேலாளர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி மற்றும் கிராம வார்டு உறுப்பினர் சதிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.