districts

img

முன்னாள் சிறைவாசிகளுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள்

வேலூர் மத்திய சிறையில் நன்னடத்தையுடன் இருந்த காரணத்தினால் அவர்கள் திருந்தி சமூகத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்திட ஏதுவாக தமிழக அரசால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு முன்  விடுதலையான 16 முன்னாள் சிறைவாசிகளுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, எம்.சந்திரசேகர், வி.கருப்பண்ணன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், சிறை கண்காணிப்பாளர் வி.ருக்மணிபிரியதர்ஷினி, மண்டல நன்னடத்தை அலுவலர் ஹாஜாகமாலுதின், செயற்குழு உறுப்பினர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.