பொதுமுடக்கத்தால் வேலையின்றி வருமானம் இழந்து தவிக்கும் திருத்தணி அடுத்த தாழவேடு ஊராட்சியில் வசிக்கும் 84 பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு இந்திய வளர்ச்சி இயக்கத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் திட்ட மேலாளர் சித்ரா, வட்டாட்சியர் ஜெயராணி, ஆய்வாளர்கள் குமார், மஞ்சுளா தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.