காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியம், வாலாஜாபாத், காஞ்சி நகரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏனாத்தூர், நல்லூர், புதுப்பாக்கம், காரை பேட்டை, வசியம்பாக்கம், தம்மனூர், கிளம்பாக்கம், கம்பராஜபுரம், வினோபா நகர், வள்ளுவர் மேடு, பல்லவன் தெரு, தாயார் குளம், பல்லவன் நகர் ஆகிய இடங்களிலுள்ள 590 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வேர்கள் அறக்கட்டளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாந்பில் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், வேர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ஜி.நளினி மோகன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன், தலைவர் எம்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.