ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தரமணி பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது, இதன் ஒருபகுதியாக வெள்ளியன்று (ஜூன் 18) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயின், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் ரபீக், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.