districts

img

ஒப்பந்த ஊழியர்களுக்காக போராடும் செங்கொடி இயக்கம் - டி. பழனிவேல்

ஒன்றுபட்ட தென்னார்காடு மின் பகிர்மான வட்டமாக செயல்பட்டு வந்த மின் பகிர்மான வட்டம் கடந்த 1986 முதல் கடலூர் மாவட்டத்திற்கு என கடலூர் மாவட்ட மின் பகிர்மான வட்டமாக செயல்பட்டு வருகிறது. இம்மின் பகிர்மான வட்டத்தில்  வருவாய் துறை அடிப்படையில்  10 வட்டம்  14 ஒன்றியம் எனவும்  மின் பகிர்மான அடிப்படையில்  8 மின்விநியோகக்  கோட்டங்கள்  26 உபகோட்டங்கள் என  17 பிரிவு அலுவலகம் வாயிலாக கடலூர் மாவட்ட முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பெருமள வில் விவசாயம் சார்ந்து இருப்ப தால் முழுக்க, முழுக்க போர், கிணறுகள் மூலம் பாசன வசதி செய்வதால் மின்சாரத்தை பெருமளவு நம்பி இருக்க வேண்டிய தேவை உள்ளது.  அதன்படி கடலூர் மின் வழங்கு வட்டத்தில் 78 ஆயிரத்து 19 விவசாய மின் இணைப்பு களும், 7 லட்சத்து 14 ஆயிரத்து 706 வீட்டுமின் இணைப்புகளும், 91,474 ஒருவிளக்கு மின் இணைப்புகள் உட்பட 10 லட்சத்து 43 ஆயிரத்து 59 மின் இணைப்புகள் உள்ளன . கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர் காலங்களில் அதிக பாதிப்பு களை எதிர்கொள்கின்ற துறை களில் மின்வாரியம் முக்கியமான தாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி, தானே புயல், மழை, பெரு வெள்ளம் மற்றும் பெஞ்சல் புயல் காலங்க ளில் கடலூர் மாவட்டம் மின்வாரியத்திற்கு உட்பட்ட மின்  கட்டமைப்புகள், மின்கம்பங்கள் போன்றவைகள் ஏராளமாக பாதிக்கப்பட்டன இதன் மூலம் மின்வாரியத்திற்கு கடுமையான சேதாரங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் கடலூர் மாவட்ட மின்வாரியம் புயல் மற்றும் பெருவெள்ளம் காரண மாக ஏற்பட்ட பாதிப்புகளை அதன் அடிச்சுவடி தெரியாமல் வெளிமாவட்டம் மற்றும் கடலூர் மாவட்ட மின் ஊழியர்கள், மற்றும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு சரி செய்து விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்கியது. மின்மாற்றி அமைத்தல், மின்கம்பம் நடுதல், மின் பாதைகள் அமைத்தல், மற்றும் மின்வாரிய பராமரிப்பு  உட்பட அடிமட்ட பணிகளை செய்ய  கடலூர் மாவட்ட மின்வாரிய கணக்கின்படி களப்பிரிவு தொழி லாளர்கள் 2,971 பதவிகள் மதிக்கப்பட்டும், தற்போது 1872 களப்பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். மீதமுள்ள காலி பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 1,200 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும்  மின்வாரிய அலு வலகங்களை சுத்தம் செய்து தண்ணீர் எடுத்து வைத்தல் போன்ற பணிகளுக்கு பகுதி நேர துப்புரவு ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பத்தாண்டுகளாக சம்பளம் இன்றி பணி செய்து வருகின்றனர்.  7,651 கிலோ மீட்டர் உயர் மின்னழுத்த பாதை மற்றும் 17 ஆயிரத்து 822 கிலோமீட்டர் தாழ்வழுத்த மின் பாதைகளைக் கொண்ட கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் புயல் வெள்ளம் மற்றும்  மழைக் காலங்கள் அல்லாது மற்ற காலங்களில் விபத்து மற்றும் தடை யின்றி மின்சாரம் வழங்கவும் மின் பாதைகள்,மின்மாற்றிகளை முறையாக பராமரிக்கவும்  பணி யாளர்கள் பற்றாக்குறையால் தள்ளாடும்  கடலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு போதுமான பணி யாளர்களை நியமிக்க வேண்டும்.  குறிப்பாக 15 ஆண்டுகளாக நிரந்தரம் கிடைக்கும் என்று,  நாள்தோறும் மின்கம்பம் நடுதல், மின் மாற்றி வைத்தல், மின்பாதைகளை கட்டமைத்தல், போன்ற பணிகளோடு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு தேவையான விரிவாக்க பணி களையும் செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் செய்து வருகின்றனர். அவர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.  தமிழக அரசும், மின்சார வாரியமும் கோரிக்கைகளை பரிசீலித்து கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்பி விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் தடையின்றி மின்சார வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  (சிஐடியு) கடலூர் மாவட்டம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.