கடலூர், ஜன.5- வேப்பூர் வட்டத்தில் உள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட இலங்கியனூர் கிராமத்தில் சேலம்- விருத்தாசலம் ரயில்வே பாதை கேட் எண் 73ல் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பதிலாக கேட் கீப்பர் நிரந்தரமாக பணியமர்த்தி செயல்படுத்திட வேண்டும் என திண்டுக்கல் மக்களவை சிபிஎம் உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார். இலங்கியனூர் கிராமத்தின் வழியாக சேலம்- விருத்தாசலம் ரயில்வே பாதை செல்கிறது. இந்த பாதையில் ரயில்வே கேட் 73 தடுப்பு சுவர் கட்டி பாதையை அடைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்து வரு கிறது. இதனை இந்த பகுதி மக்கள் எதிர்ப்பதுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலங்கியனூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், இந்த ரயில்வே கேட் வழியாக பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச்சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வயல்களில் விளை யும் நெல், கரும்பு, சோளம், கம்பு, உள்ளிட்ட விவசாய விலைப் பொருளை எடுத்துச் செல்வதற்கும் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் ரயில்வே நிர்வாகம் சுரங்க பாதை அமைத்து தடுப்பு சுவர் கட்டி பாதையை தடை செய்ய முயற்சித்து வருகிறது. ரயில்வே கேட் எண் 72 மற்றும் 74ல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டும் போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தோல்வியடைந்த ரயில்வே சுரங்கப்பாதையினை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், நிரந்தரமாக கேட் கீப்பர் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்த நிலையில் சிபிஎம் திண்டுக்கல் மக்களவை உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் இலங்கியனூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளரிடம் கூறும் போது சேலம் கோட்டத்திற்குட்பட்ட இலங்கியனூர் கிராமத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. விவசாயிகள் நிறைந்த இந்த பகுதியில் சுரங்கப்பாதையோ, மேம்பாலமோ அமைப்பதற்கு வாய்ப்பில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பகுதி விவசாயிகள் இருக்கக்கூடிய இந்த கிராமத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து இந்த இடத்தில் சுரங்கப்பாதையோ, மேம்பாலமும் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருபுறம் குளமும் மறு புறம் குடியிருப்புகளும் உள்ள நிலையில் சுரங்கம் அமைத்தால் கட்டாயமாக ஊற்று நீர் தேங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஆட்களுடன் கூடிய லெவல் கிராசிங் ஆக 73 ஆம் நம்பர் கேட்டில் பராமரிக்க வேண்டும். இது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் முறையிட்டு மக்களின் கோரிக்கையின் நியாயத்தை வலி யுறுத்த உள்ளதாகவும் அமைச்சரை சந்தித்து பேசிய பின்பு போராட்டத்திற்கு செல்வது குறித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றார். இந்த ஆய்வின்போது சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஆர். ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கத்தின் மாநில தலைவர் என்.ஆர். ஜீவானந்தம், போக்குவரத்து சிஐடியு சங்கத் தலைவர் எஸ். மணிகண்டன், வேப்பூர் வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராயர், கே. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அப்பு, ஊராட்சி மன்ற துணைத் தலை வர் பிரேம்குமார், முன்னாள் பால்வளத்துறை தலைவர் பச்ச முத்து, மற்றும் பொன். சோமு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் உடனிருந்தனர்.