tamilnadu

img

மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
தமிழ்நாட்டில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய தினம், அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்பு, அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் நின்று கொண்டிருந்தார். இது சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசின் உரையை வாசிக்கா மல் ஆளுநர் நின்றது, சட்டப்பேர வை அவமதிக்கும் செயல் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆளுநர், உரையாற்றாமல் ஆளும் கட்சி பக்கமும் எதிர்க்கட்சி பக்கமும் ஒரு பார்வை பார்த்து விட்டு பேரவைத் தலைவரிடம் ஏதோ கூறினார். பின்னர் அடுத்த நொடியே அவையில் இருந்து வெளியேறினார்.  இதன்மூலம் 2-ஆவது ஆண் டாக தமிழக அரசின் உரையை வாசிக் காமல் ஆளுநர் ரவி, தமிழக மக்களை அவமதித்தார். இதையடுத்து, வழக்கம்போல ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்தார். பின்னர், தேசிய கீதத்துடன் பேரவையின் முதல் நாள் கூட்டம் முடிவுற்றது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை அவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.