கவிஞர் எஸ்தர் ராணி எழுதி, நாற்கரம் பதிப்பகம் பதித்துள்ள ‘செஞ்சுடர் தமிழ்ஒளி’ எனும் நூலை செவ்வாயன்று (ஜன.7) சென்னை புத்தகக் காட்சியில் தமுஎகச மாநிலப் பொருளாளர் கவிஞர் சைதை ஜெ. வெளியிட, கவிஞர் கலைச்செல்வி, புலியூர்க் கேசிகன், மலர்விழி, கவிஞர் ரத்திகா, பாரதி செல்வா, ஹேமா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். பத்திரிகையாளர் மயிலை பாலு, நல்லு ரா.லிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.