திருவண்ணாமலை, மார்ச் 8- பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி, அனக்காவூர் பிடிஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் அடுத்த அத்திகுளம், தென்மா வந்தல், விலாரி பட்டு கிராமங்களில் வசிக்கும் 26 குடும்பத்தை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு, மலைவாழ் மக்கள் சங்கம் முன் முயற்சியில், தென்மாவந்தல் பட்டா வுடன் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. தொகுப்பு வீடுகள் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. அது தொடர்பாக பிடிஓ அலுவலரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத பட்சத்தில், வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு நிர்வாகிகள் ச.ரேணுகா, சி.பாஸ்கர், மு. முருகன், சி.சங்கர், காட்டுநாயக்கன் சங்க செய லாளர் அய்யனார், செய்யாறு வட்டார விவசாய சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் மகாலிங்கம், கிளைத் நிர்வாகி கள் ராஜா, பச்சையப்பன்,சுரேஷ், வள்ளி யப்பன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு வார காலத்தில் சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.