சென்னை, மார்ச் 5- சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு வலி யுறுத்தியுள்ளது. வடசென்னை குடி யிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோ சனைக் கூட்டம் ஞாயி றன்று (மார்ச் 5) மாத வரத்தில் டி.கே.சண்மு கம் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கி ணைப்பாளர் ஆர்.ஜெய ராமன் கூட்டமைப்பின் நோக்கம் குறித்து பேசி னார். இதில் திருவொற்றியூர், அம்பத்தூர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட நலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரி வித்தனர். கூட்டத்தில் அப்ரூவல் இல்லாத வீடு களை இடிப்போம் என மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும், வீடு கட்ட அப்ரூவல் வழங்கும் முறையை எளிமைப் படுத்த வேண்டும், அரசு நிலங்களில் குடியிருப் போருக்கு உடனே பட்டா வழங்க வேண்டும், கோயில், ரயில்வே நிலங்க ளில், நீர் நிலைகளில் குடி யிருப்பவர்களுக்கு அந்த இடங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, கட்ட ணங்களை குறைக்க வேண்டும், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய செயல் பாட்டை உறுதிப்படுத்தி நச்சு கலந்த காற்றை வெளி யேற்றும் ரசாயன தொழிற் சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு திடல், பூங்காக்கள் அமைத்து பராமரிக்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் மருத்துவர்கள், நவீன கருவி களுடன், மகப்பேறு வசதி யுடன் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், ஆண்டுதோறும் 6 விழுக்காடு சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு வழங்காத பகுதிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது, இணைப்பு பெறு வதை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. ஒருங்கி ணைப்பாளராக ஆர்.ஜெய ராமன் தேர்வு செய்யப் பட்டார். முன்னதாக வி. கமலநாதன் வரவேற்றார். ஆனந்தன் நன்றி கூறினார். இதில் சமூக ஆர்வலர்கள் எல்.சுந்தரராஜன், அ. விஜயகுமார், ராஜ்குமார், பா.ஹேமாவதி, வியாபாரி கள் சங்கத் தலைவர் பா.தேவராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.