சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஞாயிறன்று (ஜன.11) நடந்தது.சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.கபடி போட்டியில் வெற்றி பெற்ற தினகரன் அணிக்கு அமைச்சர் எ.வ.வேலு, திரைக்கலைஞர் துருவ் விக்ரம், திமுக வர்த்தகர் அணி தலைவர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடன் மன்றத்தின் தலைவர் எம்.சுரேஷ்வேதநாயகம், செயலாளர் மு.அசீப், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உள்ளனர்.
