districts

img

வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

விழுப்புரம், டிச.21- விழுப்புரம், அருங்குறு  க்கை கிராம மாரிமுத்து மகன் ஏழுமலை என்ப வர் தங்களுக்கு சொந்த மான நிலத்தை அபகரிக்க உதவிய வருவாய்த்துறையி னர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட மக்களின் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது,இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், அருங்குருக்கை கிராமத்தைச் சார்ந்த மாரி முத்து மகன் ஏழுமலை என்ப வர் தங்கள் கிராமத்தில் தங்களுக்கு பூர்வீகமாக உள்ள பழைய சர்வே எண் 143/2, புதிய சர்வே எண் 310/7 பட்டா எண் 619 புடவை காரியம்மன் கோயிலில் அமைந்துள்ளது, இந்த இடத்தில் நாங்கள் குடியிருப்பு கட்டி வாழ்ந்து வரு கிறோம், இந்த இடத்தை வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் முரளி என்பவர் சம்மந்தமே இல்லாத முருகேசன் என்ற நபரின் பெயரில் நிலவரித் திட்ட தூய அடங்களில் திருத்தம் செய்து கொடுத்து, அதன்மூலம் திருக்கோவி லூர் சார் பதிவாளர் அலுவ லகம் மூலம் கிரையம பெற்று அபகரித்து விட்டார். அதனால் தங்கள் நிலத்தை மீட்டுத் தரவும், போலியான ஆவ ணங்களை கொடுத்து கிரையம் செய்ய உதவிய வருவாய்த்துறையினர் மற்றும் கிரையம் செய்த சார்பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு கொடுத்ததாக தெரி வித்தனர்.