districts

img

தில்லி விவசாயிகள் போராட்ட வரலாற்றை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம்!

சென்னை,அக்.25- வரலாற்றுச்சிறப்பு மிக்க தில்லி  விவசாயிகள் போராட்டதை பதிவு செய்த தோழர் ஜோதி எழுதிய ‘பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்’ என்ற நூலை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பெ.சண்முகம் கூறினார். அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் இரா.ஜோதி எழுதிய  ‘பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்’ நூல் வெளியீட்டு விழா வடசென்னை சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று  (அக்.24) நடைபெற்றது. இவ்விழாவில்  தமுஎகச வடசென்னை மாவட்டச் செயலாளர் மணிநாத் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு விவசாய சங்கம்  மாநிலத் தலைவர் பெ. சண்முகம் நூலை வெளியிட சென்னை புறநகர் மாவட்டத்  தலைவர்  முருகன் பெற்றுக் கொண்டார். பெ.சண்முகம் இவ்விழாவில் பெ.சண்முகம் பேசுகையில், தில்லியில் நடைபெற்ற வீரம் செறிந்த போராட்டத்தில் பங்கேற்ற எங்களை போன்ற விவசாயி சங்கத்தினர் எழுதவேண்டிய ஒரு நூலை அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைமைப்பொறுப்பில் இருந்தவர் எழுதுவது அற்புதமானது, வித்தியாசமானது, உலகஅளவில் அறியப்பட்ட இந்திய விவசாயிகள் போராட்டம் மிக துள்ளியமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வீரத்தெலுங்கானா புரட்சி பற்றி தோழர்  சுந்தரய்யா நூலாக எழுதியிருக்கா விடில் அந்த முன்னோடிப்போராட்டம் வெளி உலகம் அதிகம் பேசியிருக் காது. அதுபோல ஒரு போராட்டத்தை ஆவணப்படுத்துவது மிகமுக்கியம் அந்த சீரியபணியை ஜோதி செய்தி ருக்கிறார்.  

ஒன்றிய அரசை அதிரச்செய்த விவசாயிகளின் போராட்டக்களத்தில் விசாலமான பார்வையை காண முடிந்தது. விவசாயிகள் அல்லாத தொழிலாளர்கள் இந்த போராட்டம் வெற்றிபெற பாடுபட்டனர். வெவ் வேறு கருத்தோட்டம் கொண்ட 500  விவசாயிகள் சங்கங்களை ஒருங் கிணைத்து ஒத்தக்கருத்தோடு போராட்டம் நடத்தி வெற்றிக்கு உறு துணையாக இருந்தது விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் முல்லாவின் வழிகாட்டுதல் தான். அரசியல் அற்ற போராட்டமாக துவங்கி இடதுசாரிகளின் மையமாக  மாற்றியது ஆகச்சிறந்த அரசியல் போராட்டமாகும். ஒன்றியத்தில் பாஜகவை வலுவிழக்கச்செய்த போராட்டமும்  இதுதான். இந்திய விவ சாயத்தை கார்ப்பரேட்மயமாக மாற்ற முயற்சிக்கும் 3 சட்டங்களை திரும்பபெற நடத்திய மாபெரும் போராட்டத்தை பதிவு செய்த ஜோதியை விவசாயிகள் சங்கம் மனதார பாராட்டுகிறது. இந்த நூலை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.   இரா.ஜோதி நிறைவாக நூலாசிரியர் இரா.ஜோதி ஏற்புரையாற்றினார். முன்னதாக மாதவரம் பகுதி குழு உறுப்பினர் கே.சி. ஏ. கருத்திருமன் வரவேற்றார்.   சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், காப்பீட்டு ஊழியர் சங்க முன்னாள்  பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்  தலைவர் (பொ)டேனியல் ஜெயசிங்,  மாநிலச் செயலாளர் சிபிஎம் வடசென்னை மாவட்ட செயலாளர் எல். சுந்தர்ராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ராணி,  வணிகர் சங்க தலைவர் வீ. கமலநாதன்,  தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் இரா. ந.நம்பிராஜன் , வழக்கறிஞர் சங்க  நிர்வாகி வீ. ஆனந்தன், மாதர் சங்க  நிர்வாகி பி. மைதிலி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  கே.கார்த்திக்  நன்றி  கூறினார். நிகழ்வில் நூலாசிரியர் ஜோதியின் இணையர் த.கு.சுமத்திரா மற்றும் நூல்வெளிவர உறுதுணையாக இருந்த தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.