சென்னை, மார்ச் 28 - வார்டுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி குழுத் தலைவர் ஆர்.ஜெய ராமன் வலியுறுத்தி உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023 24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் செவ்வாயன்று (மார்ச் 28) நடைபெற்றது. இதில் ஆர்.ஜெயராமன் பேசியதன் சாரம்சம் வருமாறு: பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளும், கல்வித்துறையில் புதுப்புது திட்டங்களையும் அறி வித்துள்ளதை வரவேற்கி றோம். மாநகராட்சியின் நிதி வருவாய் உயர்ந்துள்ளது. வருவாயில், 40 விழுக்காடு வரி வாயிலாக உள்ளது. இதர வருவாய் 19 விழுக் காடு மட்டுமே உயர்ந்து ள்ளது அல்லது குறைந்து ள்ளது. இதற்கு காரணம் என்ன? ஒன்றிய அரசு, மாநக ராட்சிக்கு வழங்க வேண்டிய மானியத்தை வழங்காமல் உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு மானி யம் தரக்கூடாது. அவை சொந்த நிதியில் செயல்பட வேண்டும் என உலக வங்கி, ஐஎம்எப் நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கின்றன. அதை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளதா? உள்ளாட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி னால்தான், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய மானி யத்தை வழங்கும் என்று நிர்பந்தித்தது. அதன்படி வரியை உயர்த்தியதால் வருவாய் உயர்ந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு கூறியபடி மானியத்தை வழங்கவில்லை.
அவுட்சோர்சிங் கைவிடுக
அரசாணை 152ன் படி, மாநகராட்சியின் 4ம் நிலை பணியிடங்களை ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் விடுவதை தவிர்க்க வேண்டும். 10 ஆண்டு கள் பணியாற்றி வரும் என்யுஎல்எம் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாவிட்டால், அர சாணைப்படி குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ 625 வழங்க வேண்டும். மாநகராட்சி பள்ளி களில் ஆசிரியர் பற்றாக் குறையை உள்ளது. காலிப்பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற வர்களை நிரந்தர அடிப்ப டையில் நியமனம் செய்ய வேண்டும். உதாரணமாக, 4வது வார்டு ராமநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 650 மாணவர்கள் பயில்கின்றனர். 17 ஆசி ரியர்களில் 9 பேர் மட்டுமே உள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும்.
மண்டலத்திற்கு ஒரு டயாலிசிஸ் மையம்
அனைத்து மண்டலங்க ளிலும் டயாலிசிஸ் மையங்களை அமைக்க வேண்டும். கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை சென்று கடலில் கலக்கும் நெட்டுக்குப்பம் முகத்துவாரத்தில், அனல் மின்நிலைய சாம்பல்களை கொட்டுகின்றனர். ஆயிரக் கணக்கான ஏக்கரை தனியார் ஆக்கிரமித்துஉள்ளனர். இத னால் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல், திருவொற்றியூர் மேற்கு பகுதி, மணலி பகுதிகளில் வெள்ளம் தேங்குகிறது. எனவே, தனியார் ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும்.
மருத்துவக் கல்லூரி
தண்டையார்பேட்டை மருத்துவமனையில் கண்காணிப்பு பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளிலும் கண்காணிப்பு பிரிவை கொண்டு வர வேண்டும். தண்டையார்பேட்டை மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி தொடங்க உள்ளதாக கூறி னார்கள். ஆனால், வர வில்லை. மாநகராட்சியே மருத்துவக் கல்லூரியை தொடங்கி நடத்த முயற்சிக்க வேண்டும். உயர்நீத்தோர் உடல் களை பாதுகாக்கும் அறை அமைப்பதை வர வேற்கிறோம். அதை திரு வேலங்காடு மயானத்தில் அமைப்பதற்கு மாறாக, மருத்துவமனையில் அமைக்க வேண்டும். 140 ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளன. இது போதுமானதல்ல. வார்டுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலை யம் தொடங்க வேண்டும். ஏற்கனவே இருந்த சில ஆரம்ப சுகா தார நிலையங்கள் மூடுப் பட்டுள்ளது. அதிமுக ஆட்சி யில், எர்ணாவூரில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுனாமி குடியிருப்புக்கு மாற்றிவிட்டார்கள். ராமநாதபுரம், எண்ணூரில் இருந்த மகப்பேறு மருத்துவமனைகள் மூடப் பட்டுள்ளன. எனவே, இவற்றை மீண்டும் திறக்க வேண்டும்.
நகர விற்பனை குழு
வடசென்னை மேம்
பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை வர வேற்கிறோம். சாலையோர வியாபாரிகளுக்கு நகர விற்பனைக்குழு (வெண்டிங் கமிட்டி) அமைத்து, விற்பனை இடங்களை வரையறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். வீடு, கட்டிடங்கள் பாதுகாப்பற்ற முறையில் இடிப்பதை தடுக்க வேண்டும்.
கட்டணமில்லா வாகன நிறுத்தம்
வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுவில் மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். கட்ட ணம் இல்லா வாகன நிறுத்தங் களை செயல்படுத்த வேண்டும். திருவொற்றியூர், மணலி, மாதவரம் பகுதி களுக்கென்று ஒரு இறைச்சிக்கூடம் அமைக்க வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து மண்டலங்களிலும் செயல் படுத்த வேண்டும்.
பாதாள சாக்கடை மரணம்
வார்டு மேம்பாட்டு நிதி யாக 40 லட்சம் ரூபாய் அறி விக்கப்பட்டுள்ளது. இதில் 7 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி-யாக பிடிக்கப்படும். எனவே, மேம்பாட்டு நிதியை ரூ 50 லட்சமாக உயர்த்த வேண்டும். வார்டு உறுப்பினர்களுக்கு ஊதி யம் வழங்க வேண்டும். பாதாள சாக்கடையில் நிகழும் மரணங்களை தடுக்க வேண்டும். ஐஐடி ஒரு கருவியை கண்டு பிடித்துள்ளதாக அறி வித்துள்ளது. அந்த கருவியை வாங்கி 10 வார்டு களில் சோதனை அடிப் படையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.