districts

img

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மாநகராட்சி கூட்டத்தில் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்

சென்னை, நவ. 29 - 4வது வார்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 4வது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாயன்று (நவ.29) நடைபெற்றது. அப்போது நேரமில்லா நேரத்தில் பேசிய  ஆர்.ஜெயராமன், வெள்ளத்தடுப்பு பணிகளை சிறப்பாக செய்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் பாராட்டு தெரி வித்தார். மேலும் அவர் பேசுகையில், எர்ணா வூரில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் அதிமுக ஆட்சியில் சுனாமி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. தற்போது அந்த இடத்தில் 2 செவிலியர்கள் இருந்து மாத்திரைகள் மட்டும் வழங்கி வருகின்றனர். எனவே, எர்ணாவூரில் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வைக்க வேண்டும் என்றார். ராமநாதபுரத்தில் இருந்த தாய்சேய் நல மருத்துவமனை இருந்தது. அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்கப் பட்டது. கடந்த ஆட்சியில் அங்கு பிர சவம் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள். திருவொற்றியூரில் உள்ள மருத்துவ மனைக்கு மாற்றி விட்டார்கள். 4, 6, 7வது வார்டுகளை சார்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் ரயில்வே பாதையை கடந்து அங்கு சென்று பிரசவம் பார்ப்பதில் சிரமம் உள்ளது. ஆகவே, சண்முகம் புரம் 1வது தெருவில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக உள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிலத்தை பெற்று பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும். திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதியில் ஆடு இறைச்சி கூடம் இல்லை. நகர்மன்றத் தலைவராக தாம் இருந்த போது இதற்காக கட்டிய கட்டி டத்தை மாநகராட்சி அலுவலகமாக மாற்றி விட்டார்கள். ஆகவே, புதிதாக ஒரு இறைச்சி கூடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ராம்கே நிறுவன ஊழியர்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை  குப்பை அகற்றுகின்றனர். தினசரி குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 41 மற்றும்  98வது வார்டுகளில் மாநகராட்சியே தூய்மை பணி செய்கிறது. அங்கேயும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை யும் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, மணலி பகுதிக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இறைச்சி கூடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வார்டுக்கு தேவையான தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க ராம்கே நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்படும் என்றார்.