districts

img

மாற்று ஏற்பாடு செய்யாமல் குடியிருப்புகளுக்கு சீல் வைக்கக்கூடாது மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்

சென்னை, டிச. 19- மாற்று குடியிருப்பு வழங்கமால் வீடு களுக்கு சீல் வைக்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும் என மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தினார். சென்னை நகர திட்டமிடல் குறித்த  3ஆவது தொலை நோக்கு ஆவணம் (2027 முதல் 2046 வரை) தயாரிக்க திரு வொற்றியூரில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிறன்று (டிச. 18) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு வொற்றியூர் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகை யில், மாநகராட்சியில் வீடு கட்ட கட்டிட அனுமதி வாங்க பட்டா இருக்க வேண்டும். திருவொற்றியூர் மண்ட லத்தில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் கட்டுமான கூலி ஒப்பந்தத் தொழி லாளிகள் ஆவர். பட்டா நிலம் வாங்கும் வசதியற்றவர்கள். இந்த ஏழைகள் அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், ரயில்வே நிலங்களில் பணம் கொடுத்து வாங்கிய மனைகளில், தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்த வரு மானத்தில் வீடுகட்டி வசித்து வரு கின்றனர்.

அவர்களுக்கு மாற்று குடி யிருப்பு ஏற்பாடு செய்யாமல், சீல் வைப்பது, அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அனைவருக்கும் குடி யிருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். திருவொற்றியூரின் மேற்கு பகுதி யில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். திருவொற்றியூரில் இருந்து மெட்ரோ ரயில் திட்டத்தை எண்ணூர் மற்றும் மாதவரம் வரை நீட்டிக்க வேண்டும். திருவொற்றியூர் அருகில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு கள், புகையினால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை  வலியுறுத்தி அவர் பேசினார். இதில் மண்டல அலுவலர் ந.சங்கரன், மாமன்ற உறுப்பினர்கள் சாமுவேல் திரவியம், சிவக்குமார், சுசிலா ராஜா, பானுமதி சந்தர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், மாவட்ட குழு உறுப்பினர் செல்வக்குமாரி ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.