மாடம்பாக்கம் ஏரி: கால்வாயை மறித்து கட்டுமானம் செய்ய தடை
சென்னை, பிப். 2 - மாடம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை மறித்து தனியார் நிறுவனம் மனை பிரிவு செய்கிறது. எனவே, நீர்வரத்து கால்வாய்களை மறித்து மனை பிரிவு போடக்கூடாது, ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும், ஏரியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மாடம்பாக்கம் ஏரிப் பாதுகாப்பு குழு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இது தொடர்பான கோரிக்கை மனுவை தலைமை செயலாளர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக மாடம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வீட்டுமனை பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது ஏரிப் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள், மனையின் வடக்குப்புறம் எழுப்பப்பட்டிருக்கும் சுவற்றினால் மழைநீர் ஏரிக்கு செல்வது தடுக்கப்படுகிறது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் தேங்கும் அபாயம் உள்ளது. தெற்குப் பகுதியில் போதிய இடம் விடாமல் விதியை மீறி சுவர் எழுப்பப்பட்டிருப்பத்தை சுட்டிக்காட்டினர். மனைப்பிரிவு மேற்பார்வையாளர்களிடம் மேற்கண்ட விதிமீறல்கள் குறித்து விசாரித்த அதிகாரிகள், சிஎம்டிஏ அனுமதி இல்லாமல், ஆரம்பநிலை அனுமதி மட்டுமே உள்ளதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு நடைபெறும் பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அறக்கட்டளை விரிவாக்கம்
சென்னை, பிப்.2- மாற்றுத்திறனாளிகளுக்கான சமர்த்தனம் அறக்கட்டளையானது அதன் 17வது வாழ்வாதார வள மையத்தை (எல்ஆர்சி) கோயம்புத்தூரில் தொடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் பின்தங்கிய இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான அதன் 2வது மையமாகும். திறன் பயிற்சி மற்றும் இலவச தங்கும் இடம் கொண்ட இந்த வசதி, கேபிஎம்ஜி குளோபல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ளது. கோவை கணபதியில் உள்ள சமர்த்தனம் வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சமர்த்தனம் அறக்கட்டளையின் நிறுவன நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜி.கே. மஹாந்தேஷ், இணை நிறுவனர் பியூஷ் சிங்கானியா, ஆலோசனை மற்றும் சமூகப்பொறுப்பு திட்ட இணை இயக்குநர் இந்தர்ப்ரீத் கவுர் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். புதிய மையம், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திராமல் சுயசார்பு நிலையை எட்ட உதவும் நோக்கத்துடன், வேலைவாய்ப்பை மேம்படுத்த தொழில்நுட்ப மற்றும் துறை சார்ந்த திறன் பயிற்சி திட்டங்களை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மாதவரத்தில் நவீன வசதிகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்பு
சென்னை, பிப்.2- சென்னை ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் டிஆர்ஏ மாதவரத்தின் பிரதான இடத்தில் ‘டிஆர்ஏ அஸ்ட்ரா என்னும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை துவங்கி உள்ளது. இங்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2 மற்றும் 3 படுக்கை அறைகளைக் கொண்ட 132 பிளாட்கள் கட்டப்பட உள்ளன. இதன் ஒரு சதுர அடி விலை ரூ.6,599 முதல் துவங்குகிறது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மிகவும் அமைதியான இயற்கையான சுற்றுப்புறத்துடன் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரதான இடத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலும், அதனைச் சுற்றி பள்ளிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என பல்வேறு முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோட் கூறியுள்ளார்.
பேருந்து வசதி இல்லாத விவரங்களை தெரிவிக்க ஆட்சியர் அறிவுரை
ராணிப்பேட்டை,பிப்.2 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத விவரங்களை செவ்வாய்க்கிழமைக்குள் (பிப்.4) வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரிலோ தெரி வித்து தமிழக அரசால் அறி விக்கப்பட்ட புதிய மினி பேருந்து திட்டம் நடை முறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து பரிசீலனை செய்து மினி பேருந்து வழித்தடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.
வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் அறிவிப்பு
ராணிப்பேட்டை,பிப்.2 தமிழ்நாடு வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பேரவைக்கூட்டம் செய லாளர் யு.வரதராஜன் தலை மையில் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் எம்.சேட்டு, மாநில பொது செயலாளர் இ. கெங்காதுரை, திருவள்ளூர் மாவட்ட தலைவர் டில்லி, மாநிலக்குழு உறுப்பினர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்டத் தலை வராக எம்.ஏழுமலை, செய லாளராக யு.வரதராஜன், பொருளாளராக செந்தில் வேலன் உள்ளிட்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. பேரவையில் வேட்டைக் காரன் பழங்குடி மக்க ளுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி மாவட்ட ஆட்சி யரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.