பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்த சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எஸ்.நித்திலாவை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி நேரில் சந்தித்து பாராட்டினார். சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் அனுஷ்கா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.