districts

img

பேரிடர் மருத்துவம் குறித்து தேசிய மாநாடு

சென்னை, மார்ச் 11- பேரிடர்  மருத்துவம் குறித்த தேசிய மாநாடு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஹெல்த் சென்டரில் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிறன்று நிறைவடையுள்ள இந்த  மாநாட்டை   விஜயா குழும மருத்துவமனை கள் ,  இந்திய மருத்துவ சங்கம், சென்னை  விஜயா மருத்துவமனை கிளையுடன் இணைந்து நடத்துகிறது. கேரள உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி  எஸ்.மணிகுமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார். பேரிடர் மேலாண்மை யில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட  பல  மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.  எதிர்பாராத பேரிடர்களின் போது சுகாதார  மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்க தயார் நிலையில்  இருக்க  வேண்டிய அவசியத்தை இந்த மாநாடு வலியுறுத்தியது .  மாநாட்டை யொட்டி தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்  மற்றும் மாநில  பேரிடர் மீட்பு படை பல செயல் முறை  விளக்கங்களையும் சோதனை பயிர்ச்சி களையும் மேற்கொண்டன.  விஜயா மருத்து வமனை சமீபத்தில் தனது பொன்விழாவைக் கொண்டாடியது. இம்மருத்துவமனை மருத்துவத் துறையில் அறிவினை  பகிர்ந்து கொள்ளும் வகையில் இதுபோன்ற மாநாடுகளுக்கு ஒத்துழைத்து வருகிறது.