சென்னை, செப்.2- தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் உள்ள சுங்கச்சாவ டிகளில் 2 கட்டங்களாக கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன இதனால் சுங்கக்கட்டணம் கடுமையாக உயரும் நிலை உள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் கூடுதலாக ரூ.115 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல 505 கி.மீ ஆகும். இந்த வழியில் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு இதுவரை ரூ.580 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி கோவை செல்ல ரூ.695 கட்ட ணம் செலுத்த வேண்டும். அதாவது ரூ.115 கூடுத லாக செலுத்த வேண்டும். இதேபோல் சென்னை-நாகர்கோவில் இடையே உள்ள தூரம் 705 கி.மீ ஆகும். இந்த வழியில் ஏற்கனவே 13 சுங்கச்சாவடிகள் உள்ளன. நாகர்கோவில் செல்ல இது வரை ரூ.955 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி சுங்க கட்டணமாக ரூ.1055 செலுத்த வேண்டும். சென்னை-மதுரை இடை யிலான தூரம் 462 கி.மீ ஆகும். இந்த வழியில் 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்ல இதுவரை ரூ.585 சுங்ககட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி ரூ.645 செலுத்த வேண்டும். சென்னையில் இருந்து பெங்களூருக்கு 346 கி.மீ தூரம் ஆகும். இந்த வழியில் 7 சுங்கச்சாவடிகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ஏற்கனவே ரூ.430 சுங்க கட்ட ணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி ரூ.460 கட்ட ணம் செலுத்த வேண்டும். கல்லக்குடி சுங்கச்சாவடி கடந்த மே மாதமும், மண கெதி சுங்கச்சாவடி கடந்த ஜூன் மாதமும் செயல்பட தொடங்கியது. இந்த சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்க தொடங்கவில்லை. இதே போல் மணவாளநல்லூர் சுங்கச்சாவடியிலும் இன்னும் கட்டணம் வசூலிக் கப்படவில்லை. இந்த கட்டண உயர்வு பொது மக்களை பாதிக்கும் என்ப தால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்க ம்யூ னிஸ்ட்கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலை வர்களும், வணிகர்களும் வலியுறுத்தி உள்ளனர்.