districts

img

வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குக மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

திருவள்ளூர், பிப்.2- பன்னீர் வாக்கம் கிராமத்தில் வசிக்கும் வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பொன்னேரி கோட்டாட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பன்னீர்வாக்கம் கிராமத்தில் இரண்டு தலைமுறைகளாக கிராம நத்தத்தில்  வேட்டைக்காரன் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள்  பட்டா வேண்டி மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலை மையில் பலமுறை போராட்டம் நடத்தி னர். இதனை தொடர்ந்து  2024 ஆண்டு மார்ச் 8 அன்று 60 நபர்களுக்கு பொன்னேரி வட்டாட்சியர் பட்டா வழங்கி னார்.  அந்த பட்டாக்களை கிராம பதி வேட்டில் ஏற்றாததால் பட்டா கிடைத்தும் பயனற்றதாக உள்ளதால், உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் மனு கொடுத்தனர். முடிவில். 49 . நபர்களுக்கு கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கொடுத்த பட்டா நகலில் எட்டு நபர்கள் பெயர்களில் எழுத்து பிழை உள்ளது . இதனை  சரி செய்து கொடுக்க வேண்டும் என பல முறை முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜன 31 அன்று வட்டாட்சியரிடம் மனு அளித்ததின் பேரில் எழுத்து பிழையை திருத்தம் செய்து பட்டா வழங்கப்பட்டது. வேண்டுகோள் விடுபட்ட மூன்று நபரின் பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் வேண்டும். மேலும் விடுபட்ட 6 குடும்பங்களுக்கு பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரி கள் வழங்குவதற்கும் உத்தரவாதம் அளித்துள்ளனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணை செயலாளர் ஆர்.தமிழரசு,  வேட்டைக்காரன் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை,  மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் டி.டில்லி. பன்னீர்வாக்கம் கிராம வேட்டைக்கார இன மக்கள் பலர் கலந்து கொண்டனர்.