கள்ளக்குறிச்சி, ஆக. 24- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்த மங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயி கள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ள னர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகு தியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வில்லை. இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடி யாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குடோ னில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி வந்தது. இதனால் மனவேதனை அடைந்த வியாபாரி கள், அந்த வெண்டைக்காய்களை பொதுமக்களுக்கு இலவச மாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று 4 மினிலாரி களில் வெண்டைக்காயை வியாபாரிகள் ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கூவி, கூவி அந்த வெண்டைக்காயை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் இன்ப அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வெண்டைக்காயை துண்டு, பாலித்தீன் பை உள்ளிட்ட வற்றில் வாங்கி சென்றனர்.