மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூர் நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.உதய நிலா செவ்வாயன்று (பிப்.8) அன்னை தெரசா நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார், கே.செல்வராஜ், டி.ஆர்.பலராமன், டி.மகேந்திரன், யோகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்