districts

img

மார்ச் 25 விழுப்புரத்தில் புத்தக திருவிழா

விழுப்புரம், மார்ச் 22- விழுப்புரத்தில் வருகிற 25 ஆம் தேதி புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதை யொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார்.  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மார்ச் 25 சனிக்கிழமையன்று புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகை யில், “பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்பதற்காகவும் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது”என்றார். விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இந்த புத்தக திருவிழாவை நடத்துகிறது. அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழா வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த புத்தக திருவிழாவை நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்திடும் வகையில் பெருந்திரள் வாசிப்பும், மாண வர்களுக்கான கட்டுரை, கவிதை உள்பட பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.  இதுமட்டுமல்லாமல், பாரம்பரிய உணவுத்திருவிழாவும், மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு களும் அமைக்கப்படவுள்ளது. புத்தக திருவிழாவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சி யர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சாராட்சியர் கட்டா ரவி தேஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி உள்பட பலர் உடனிருந்தனர்.