districts

பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தவர் கைது

சென்னை, செப்.9-  மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமி  ஒருவர் கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பித்துள்ளார். இதுகுறித்து அபிராமபுரம் காவல்நிலை யத்தில் புகார் செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது25) என்பது தெரிய வந்தது. இதே போல் அவர் மயிலாப்பூர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் 25-க்கு மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதை யடுத்து தனுசை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதேபோல் மாதவரத்தில் கடைக்கு சென்ற  9 வயது சிறுமியிடம்  பாலியல் தொல்லை கொடுத்த செஞ்சியைச் சேர்ந்த ஒரு நபரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.