districts

விதி மீறிய கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை,நவ.27- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை மூடி சீல் வைக்க  மாநகராட்சி  முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்க ளிலும் 13.11.2022 முதல்26.11..2022 வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனு மதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதி யின்றி கட்டப்பட்டுள்ள 175கட்டுமான இடங்க ளின் உரிமையாளர்களுக்கு தொடர்புடைய கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என குறிப்பாணை வழங்கப்பட்டது.அதன டிப்படையில்  விதி மீறல்களை திருத்திக் கொள்ளாத 10கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல் கட்ட டங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலு வலர்களால் கண்காணிக்கப்பட்டு வரு கிறது. எனவே, கட்டிட உரிமை யாளர்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரை படத்தின்படிகட்டிடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப் படும்கட்டிடங்கள் மூடி சீல் வைப்பதற்கான உரிய நட வடிக்கைமேற்கொள்ளப்படும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது.