districts

img

ஓய்வூதிய மாற்றத்தை பெறும் வரை போராட்டம் தொடரும்

சென்னை, மார்ச் 8 - 7 ஆண்டுகளாக வழங்கப் படாமல் உள்ள ஓய்வூதிய மாற்றத்தை பெறும் வரை தொடர் போராட்டம் நடை பெறும் என்று பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தலைவர்கள் தெரிவித்துள் ளனர். அகில இந்திய பிஎஸ்என் எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை தொலைபேசி மாநில 4வது மாநாடு சனிக்கிழமையன்று (மார்ச் 8) வேப்பேரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி.ஜெயராமன் பேசு கையில், 2017ஆம் ஆண்டி லிருந்து ஓய்வூதிய மாற்றம்  செய்யப்படாமல் உள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்க ளுக்கு நிர்வாகம் ஊதியம் வழங்குகிறது. ஓய்வூதியர்க ளுக்கு ஒன்றிய அரசுதான் ஓய்வூதியத்தை வழங்கு கிறது. எனவே ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்திற்காக காத்திருக்காமல் ஓய்வூதியர் களுக்கு ஓய்வூதிய மாற்ற த்தை செய்ய வலியுறுத்தி வருகிறோம் என்றார். ஓய்வூதிய பலனை 30 விழுக்காடாக உயர்த்த வேண்டும், ஓய்வூதியர்க ளுக்கு 65 வயதில் 5 விழுக் காடு, 70 வயதில் 10 விழுக் காடு, 75 வயதில் 15 விழுக்காடு என ஓய்வூதி யத்தை உயர்த்தி தர வேண்டும். குடும்ப ஓய்வூதி யத்தை 50 விழுக்காட்டி லிருந்து 70 விழுக்காடாக வழங்க வேண்டும். 1.1.2000 க்கு பிறகு பணியில் சேர்ந்த வர்ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் நிறைவேறும் வரை நமது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். ஒன்றிய அரசு சதி பிஎஸ்என்எல்இயு துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.செல்லப்பா பேசுகை யில், “4ஜி க்கான அலைக்கற் றையை ஒன்றிய அரசு கொடுத்துவிட்டது. 4ஜி சேவை வழங்க ஒரு லட்சம் டவர்களை நிறுவ வேண்டும். நவீன உபகரணங்கள் தேவை. இந்தியாவில் அத்தகைய தொழில்நுட்பம் இல்லை. அவற்றை வெளி நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்ய ஒன்றிய அரசு  தடை விதித்ததோடு டவர்க ளையும் அமைக்காமல் உள்ளது. நவீன உபகரணங்களை வழங்க டாடா நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது. ஆனால், டாடா நிறுவனம் ஒப்புக் கொண்ட படி உபகரணங்களை வழங்கவில்லை. இதனால் கடந்தாண்டு பிஎஸ்எஸ்எல் சிம்கார்டு பெற்ற ஒரு கோடி வாடிக்கையாளர்களில் 50  லட்சம் பேர் வேறு நிறுவன ங்களுக்கு சென்றுவிட்டனர்” என்றார். “பிஎஸ்என்எல் நிறு வனத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் சொத்து உள்ளது. 7.50 லட்சம் கிலோ மீட்டர் ஆப்டிக் பைபர் கேபிளை வைத்துள்ளது. பிஎஸ்என் எல் நிறுவனத்தை நட்ட மாக்கி அதானிக்கு கொடுக்க திட்டமிடுகின்றனர். எனவே தான், தொலைத்தொடர்பு துறையில் அனுபவமே இல் லாத அதானிக்கு 5ஜி அலைக் கற்றையை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதை ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கத்துடன் இணைந்து முறியடிப்போம். ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்தை பெற்றே தீருவோம்” என்றும்  கூறினார். முன்னுரிமை சென்னை தொலைபேசி யின் பொது மேலாளர் பார்த் திபன் தனது வாழ்த்து ரையில், “ஓய்வூதியர்களின் பிரச்சனைகளுக்கு முன்னு ரிமை கொடுத்து தீர்க்க கடமைப்பட்டுள்ளோம். ஓய்வூதியர்களை அலைய விடாமல், ஆன்லைன் மூல மாக அனைத்து தேவை களையும் நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.