districts

img

விருத்தாசலத்தில் குமார் ஆனந்தன் நினைவு ரத்ததான முகாம்

கடலூர், ஜுன் 6- குமார் ஆனந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு விருத்தாசலத்தில் வாலிபர் சங்கத்  தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை  சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூரில் புதுப்பாளையம் பகுதி யில் 1999ஆம் ஆண்டு கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த தோழர்கள் குமார், ஆனந்தன் நினைவு நாள்  ஜூன் 26ஆம் தேதி.  ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தாலும், ரத்த தேவை இருப்பதாலும், முன்கூட்டியே சனிக்கிழமை ஜூன் 5ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்க வட்டத் தலைவர் டி.பரமசிவம் தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.  ரத்ததான முகாமை விருத்தாச்சலம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் மணிக்கண்டராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்   இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், வாலி பர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.கலைச்  செல்வன், வட்டப் பொருளாளர் பி.செல்வக் குமார், என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.அமிர்த லிங்கம், வட்டக் குழு உறுப்பினர் பி.சதிஷ், நல்லூர் பி.அனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.