திருவள்ளூர், ஜுன் 26- கடலூர் குமார், ஆனந் தன் நினைவு நாளான ஜுன் 26ஆம் தேதி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மனிதநயம், மக்கள் ஒற்று மையை வலியுறுத்தி சமூக சேவையில் இளைஞர்களை ஈடுபடுத்தி வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் மக்களின் உயிர் களை காக்கும் விதமாக ரத்ததானமும் செய்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் 1,242 யூனிட் ரத்தம் தானமாக வழங்கியுள்ளனர். கடலூர் குமார், ஆனந்தன் நினைவு நாளையொட்டி பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் 53 பேர் ரத்த தானம் வழங்கினர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், செயலா ளர் எஸ்.தேவேந்திரன், பகுதிச் செயலாளர் கே.சதிஷ்குமார், தலைவர் டி.பிரசாந்த், வட்டாட்சியர் இ.மணிகண்டன், பொன் னேரி அரசு பொது மருத்து வமனையின் தலைமை மருத்துவர் எஸ்.அனுரத்னா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ. தா.வசந்த்பௌத்தா, விவ சாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட நிர்வாகிகள் இ. தவமணி, என்.கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.