districts

img

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் கபடி போட்டி

திருப்பத்தூர் , ஜன.10- பொங்கல் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் பொன்னேரி அடுத்த மண்டலவாடி கூட்ரோடு பகுதியில் நடைபெற்றது. இப்போட்டியினை ஒன்றிய கவுன்சிலர், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் உமா கண்ரங்கம் தலை மையில் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் கோபிநாதன் வரவேற்புரை ஆற்றினார். இப்போட்டியில் மொத்தம் 12 அணியினர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு  முதல் பரிசாக ரூ.15ஆயிரம்,  இரண்டாம் பரிசாக ரூ.10ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.7ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.5ஆயிரம், சிறந்த ஆட்ட நாயகருக்கு ஆயிரம் ரூபாய் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது. போட்டியில் ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுசாமி, ஒன்றிய துணைச் செயலா ளர்கள் வைரமணி, வள்ளிகண்ணன், பொருளாளர்கள் திருப்பதி, பாலாஜி, மாவட்ட பிரதிநிதி சாமுடி, ஒன்றிய விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திவாகர், துணை அமைப்பாளர்கள் செல்வகுமார், சீனிவாசன், ஸ்ரீநாத், ரகுநாத், கிளைக் கழகச் செயலாளர்கள்  இளைஞர்கள் என  பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக  ஒருங்கி ணைப்பாளர் முருகன் நன்றி கூறினார்.