பொன்னேரி, அக்.15- மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் விமல் (40) என்பவருக்கு சொந்த மான பிரகாஷ் ஜுவல்லரியில் வெள்ளியன்று இரவு மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து 15 சவரன் அடகு நகைகள் மற்றும் ரூ 10 ஆயிரத்தை திருடியுள்ளனர். சனிக்கிழமையன்று கடை யின் ஷட்டர் உடைக்கப் பட்டிருந்ததை பார்த்த பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படை யில் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.