விழுப்புரம், ஜூன் 17- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டாசியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மாநில சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்பட 50 பேருக்கு அரசின் நலத் திட்ட உதவிகளும், 31 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை உள்பட மொத்தம் 260 பேருக்கு ரூ.19.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வட்டாட்சியர் கோவர்தனன், ஒன்றியக் குழுத் தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.