districts

காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

சென்னை, மே 12- தமிழகத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரு கிறது. கொரோனா 3ஆவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம், மோசமான நிலை வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என வும் அறிவுறுத்தியது. மேலும் தமிழகம் மற்றும்  புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தர விட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறி வுறுத்தியது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் மருத்துவ மனைகளுக்கு வர அஞ்சுவதால்,  தடுப்பூசி செலுத்தும் மையங்களை வேறு இடங்களில் அமைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும் கூறியது. தடுப்பூசி  கொள்முதலுக்கு டெண்டர் கோருவது தொடர்  பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்  என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.