திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற ரேசன் கடை, பள்ளி உள்ளிட்ட அரசு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி, அமராவதி முருகையன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.