districts

img

செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையம் துவக்கம்

செங்கல்பட்டு, ஜுலை 21- செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையத்  திற்கான புதிய அலுவலகம் துவங்கப் பட்டுள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த பய னாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள் ளார். சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலா ளாரை அணுகி ஆலோசனைகள் பெற்று 25  சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்து டன் கடன் வசதி பெற்று தொழில் தொடங்கி பயன் அடையும் வகையில் மாவட்ட தொழில்  மையம் செங்கல்படடு வேதாசலம் நகரில் துவங்கப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள் தயாரித்தல், தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி,  உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் கள், மருத்து பொருட்கள் தயாரித்தல், ஏற்று மதி தரத்தில் மரஅரைகலன்கள் (பர்னிச்சர்) தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், மின் மற்றும் மின்னணு சாதனம் தயாரித்தல், அனைத்து உற்பத்தி சேவை தொழில் மற்றும் வியாபாரம் தொடங்க தக்க ஆலோ சனைகள் பெறும் வகையில் இந்த மையம் துவங்க்கப்பட்டுள்ளது. இந்த அலுவலலகத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செவ்வா யன்று (ஜுலை 20) துவக்கிவைத்து பயனாளி களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். இதில் தொழில் வணிகத்துறை கூடுதல் இயக்குநர்கள் ஏகாம்பரம், மாவட்ட தொழில்  மைய பொது மேலாளர் ஆர்.ரமணி. மாவட்ட  ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.வரலட்சுமி, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக தொழில் தொடங்கும் இளை ஞர்கள் மாவட்ட தொழில்மையத்தை பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன் கேட்டுக் கொண்டார்.