சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் பி.சந்திர மேரி வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தேவி, மாவட்டச் செயலாளர் எல்.அனந்தகிருஷ்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.