புதுச்சேரி, ஜூன் 2- மருத்துவக் காப்பீடு பெறுவதற்கான சிறப்பு முகாம் புதுச்சேரி சுகா தாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: ஆயுஷ்மான் பாரத் பிர தான் மந்திரி ஜன் ஆரோக் கியா யோஜனா மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிவப்பு நிற அட்டைதாரர்கள் இலவச மருத்துவ சேவை செய்து கொள்வதற்கான மருத்துவ அட்டை பதிவிற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மருத்து வமனைகளில் இலவசமாக இந்த காப்பீடு அட்டை பதிவு செய்து தரப்படுகிறது. புதுச்சேரி சுகாதாரத்துறை, மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி, லாஸ்பெட் ஜீவானந்தபுரம் அரசு ஆரம்பப்பள்ளி, வானர பேட் அமலோர்பவம் உயர் நிலை பள்ளி, முத்தியால் பேட்டை யூத் ஹாஸ்டல் ஆகிய இடங்களிலும், இல வச அரிசி விநியோகம் செய் யும் இடங்களிலும் ஜூன் 3ஆம் தேதி சிறப்பு பதிவு முகாம் அமைக்கப்பட்டுள் ளது. புதுச்சேரியில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை தாரர்கள் சிவப்பு அட்டை யின் அசல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்க ளைக் கொண்டு இலவச மாக பதிவு செய்து கொள்ள லாம். மேலும் தங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (1800-425-7157) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.