districts

img

பணிக்கன் குப்பத்தில் பேருந்து நிறுத்தம் சிபிஎம் கோரிக்கை நிறைவேற்றம்

கடலூர், பிப்.2 - பணிக்கன் குப்பம் ஆதிதிராவிடர் பகுதிக்கு பேருந்து நிறுத்தம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கை  நிறைவேற்றப்பட்டு, ஞாயிறு (பிப்.2) முதல் பேருந்துகள் நின்று செல்கின்றன. கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி வட்டம் பணிக்கன் குப்பம் கிராமம் ஆதி திராவிடர் பகுதிக்கு தனி பேருந்து நிறுத்தம் வேண்டும், இந்த வழியாக செல்லும்  அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி. சிபிஎம்  கோரிக்கை வைத்து அரசு அதி காரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இக்கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளும், பணிகன்குப்பத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.   இதனை அடுத்து பேருந்து நின்று செல்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினர். அதன் அடிப்படையில் பணிக்கன் குப்பம் கிராமத்தில் பேருந்து நின்று சென்றது.இதனைக் கொண்டாடும் வகையில் சிபிஎம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பில்  பேருந்துகளின் ஓட்டுநர், மற்றும் நடத்துநருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், வட்ட குழு உறுப்பினர் காசி.லோகநாதன்,நிர்வாகிகள் சர்க்கரை, சிவக்குமார் அஞ்சாப்புலி, வேலு, சிகாமணி, விசிக கிளை செயலாளர் எஸ்.செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிளை செயலாளர் ஜே.கமல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.